தெலுங்கில் அறிமுகம் ஆகும் அர்ஜுன் தாஸ்!
நடிகர் அர்ஜுன் தாஸ் முதன் முதலாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழில் கைதி, அந்தகாரம் மற்றும் மாஸ்டர் படங்களில் தனது முரட்டுத்தனமான நடிப்பு மற்றும் குரல் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்தார். இப்போது வசந்தபாலன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் இப்போது முதல் முதலாக தெலுங்கில் ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளார்.
இந்த படம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கப்பேல்லா திரைப்படத்தின் ரீமேக் ஆகும். செளரி சந்திரசேகர் ரமேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸுடன் சித்து ஜொன்னலகட்டா மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகி தேர்வு இப்போது நடந்து வருகிறது.