டிக்டாக் படத்தின் டீசரை இணையத்தில் தேடும் ரசிகர்கள்… ஏன் தெரியுமா?
பிரியங்கா அருள்மோகன் கவர்ச்சியான வேடத்தில் நடித்துள்ள டிக்டாக் படத்தின் டீசர் வெளியாகி சில மாதங்கள் ஆகும் நிலையில் இப்போது மீண்டும் தேடப்படுகிறது.
டாக்டர் படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் இடையே கவனம் ஈர்த்துள்ளார் பிரியங்கா அருள் மோகன். இதையடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. சிவகார்த்திகேயனின் அடுத்த படமான டான் படத்திலும் அவரே கதாநாயகி. மேலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் அவர் தான் முதல் முதலாக நடித்து இன்னமும் ரிலிஸ் ஆகாமல் இருக்கும் டிக்டாக் என்ற படத்தின் ரிலிஸ் பற்றிய அச்சத்தில் இருக்கிறாராம். ஏனென்றால் அந்த படத்தில் அவர் கவர்ச்சியான வேடத்தில் நடித்திருக்கிறாராம். இப்போது அவருக்கு இருக்கும் நல்ல நடிகை என்ற பெயர் அந்த படம் வந்தால் காலியாகிவிடும் என்பதால் அச்சத்தில் உளவுகிறாராம். இந்த செய்தி கேள்விப்பட்ட ரசிகர்கள் அந்த டிரைலரை இப்போது இணையத்தில் அதிகமாக தேட ஆரம்பித்துள்ளார்களாம். அதனால் அந்த படத்தின் மீது தனிக்கவனம் விழுந்துள்ளது.