ஏமாற்றிய சிவகார்த்திகேயன்: வருத்தத்தில் ரசிகர்கள்
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
இந்த படம் மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் மே 17-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் டுவீட் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதே நேரம் ‘Mr.சந்திரமௌலி’ படத்துக்கு பிறகு கெளதம் கார்த்திக் நடித்துள்ள படம் ‘தேவராட்டம்’. இந்த படத்தை முத்தையா இயக்கியுள்ளார். இதில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். சமீபத்தில், இதன் டீசர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. தற்போது, இந்த படத்தை வருகிற மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.