மீண்டும் முட்டிக்கிச்சா… சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்துக்கு ரி ஷூட்டா?
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பின் போது இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் மோதல் உச்சத்தை எட்டி படப்பிடிப்பே நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரு தரப்பும் சமாதானமாகி படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கி நடந்துவரும் நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கும் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் எடுத்த பல காட்சிகளை ரி ஷூட் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஷூட்டிங் முடிய எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் ஆகும் என சொல்லப்படுகிறது.