மொரண்டு புடிச்ச சந்தானம்…. டபுள் சம்பளம் கொடுத்து ஓகே செய்த விக்னேஷ் சிவன்!
அஜித் 62 படத்தில் சந்தானம் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருவதால் சந்தானத்தைக் கதாநாயகனாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆனால் பிடிவாதமாக கதாநாயகனாகதான் நடிப்பேன் என சந்தானம் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்போது அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் சந்தானத்தை நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் கதை சொல்லி அவரை நடிக்க வைக்க சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சந்தானம் காமெடியனாக நடிக்காமல் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் முதலில் நடிக்க தயங்கிய சந்தானம், கடைசியாக ஒப்புக்கொண்டதற்கு முக்கியக் காரணமே, அவர் தற்போது வாங்கும் சம்பளத்தை விட இருமடங்கு கொடுத்ததுதான் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்துக்கு சுமார் 60 நாட்கள் தேதிகள் ஒதுக்கியுள்ளாராம் சந்தானம்.