விஜய்க்கு கிடைக்காத அதிர்ஷ்டம் சிவகார்த்திகேயனுக்கு அடித்தது
பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி உள்ள சீமராஜா படம் போலாந்து நாட்டி வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக நடிக்கும் திரைப்படம் சீமராஜா. இந்த படத்தில் நடிகை சமந்தா முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமாக வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சீமராஜா படத்தை போலாந்து நாட்டில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிரது.
இதுவரை ரஜினி, அஜித் ஆகியோரின் திரைப்படம் மட்டும்தான் போலாந்து நாட்டில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த அதிர்ஷ்ட வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ளது. விஜய் நடித்த படங்கள் கூட இதுவரை போலாந்து நாட்டில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.