புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 26 ஜூன் 2020 (08:24 IST)

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சிறை மரணம் - பாடகி சுசித்ரா வெளியிட்டுள்ள வீடியோ!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு போலிஸ் அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தொடர்பாக ஒரு வீடியோவை சுசித்ரா வெளியிட்டுள்ளார்.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய தந்தை, மகன் ஆகிய இருவரும்  ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையைத் திறந்ததாக விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு போலிஸார் கடுமையாக தாக்கியதால் இருவரும் அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நீதி விசாரணை வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தமிழக அரசோ அவர்கள் இருவரும் உடல்நலக் குறைவால் இறந்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
இந்நிலையில் இதுகுறித்து பாடகியும் சினிமா நடிகையுமான சுசித்ரா, ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’தென் இந்தியாவில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் முழு இந்தியாவுக்கும் தெரியாமல் போகும் சூழல் இருப்பதால், இதை அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாக ஆங்கிலத்தில் பேசுகிறேன்.’ எனக் கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதில் அவர்கள் மரணிக்கும் வரை நடந்த சம்பவங்களை விவரித்துள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.