வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (09:29 IST)

இசையமைப்பாளராக மாறும் பிரபல பின்னணி பாடகர்

தமிழ் சினிமாவில் ஏற்கனவே எஸ்பிபி, ஜேசுதாஸ், ஜானகி உள்பட பல பின்னணி பாடகர்கள் இசையமைப்பாளர்களாக மாறி ஒருசில திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது பிரபல இளம் பின்னணி பாடகர் சித்ஸ்ரீராம் ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
அதிலும் சித்ஸ்ரீராம் இசையமைக்கும் முதல் படமே மணிரத்னம் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்னம் கதை, திரைக்கதையில் அவருடைய உதவியாளர் தனசேகரன் இயக்கவுள்ள திரைப்படம் 'வானம் கொட்டட்டும். விக்ரம்பிரபு, மடோனா நடிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.
 
இந்த படத்தில் இசையமைக்க சித்ஸ்ரீராம் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் பாடிய பாடகர் சித் ஸ்ரீராமின் இசையில் உருவாகும் பாடல்கள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்