சிம்பு பட இசையமைப்பாளர் தமனுக்கு கொரொனா!
தெலுங்கு சினிமாவில் நேற்று சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கொரொனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று இசையமைப்பாளர் எஸ். தமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் எஸ். தமன். இவர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில், இவர் இசையில் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படத்தில் பாடல்களுக்கான பாராட்டப்பட்டார். விஷால் – ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இ ந் நிலையில், இசையமைப்பாளர் எஸ். தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கொரொனா அறிகுறிகள் உள்ளதால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சமீப நாட்களாகத் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், கொரொனாவுக்கு எதிரான பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.