புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 23 ஜனவரி 2019 (20:33 IST)

பொத்திக்கிட்டு போங்க.. சீனு கீனு வுட்டா செஞ்சிருவோம்: சிம்பு வீடியோ!

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரின் தெரேசா ஆகியோர் நடித்துள்ளனர். 
 
இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
முன்னதாக படத்தின் எனக்கா ரெட் கார்டு பாடல் லிரிக்கல் வீடியோ தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளது என பேசப்பட்டது. 
 
அதைத்தொடர்ந்து இப்போது வாங்க மச்சா வாங்க பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில், போங்க மச்சான் போங்க சும்மா பொத்திக்கிட்டு போங்க சீனு கீனு வுட்டாக்கா செஞ்சிடுவோம் நாங்க போன்ர வரிகள் இடம்பெற்றுள்ளது. 
 
நேற்றுதான் பால் அபிஷேகம் குறித்து வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள சிம்புவின் படத்தில் இந்த மாதிரி வரிகள் சிம்புவை எதிர்ப்பவர்களுக்கு போலூம் என்ற டாக் கோலிவுட்டில் உள்ளது.