'வந்தா ராஜாவாதான் வருவேன்' செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Last Modified செவ்வாய், 22 ஜனவரி 2019 (19:35 IST)
சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரசா நடிப்பில் உருவாகியுள்ள ''வந்தா ராஜாவாதான் வருவேன்' வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகியுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீசை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி இந்த படத்தில் இடம்பெற்ற 'ரெட் கார்டு' என்ற பாடல் வெளியானது. சிம்பு பாடிய இந்த பாடல் இணையதளங்களில் வைரலாகிய நிலையில் நாளை மாலை 5 மணிக்கு இந்த படத்தின் அடுத்த பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகியுள்ள இந்த செகண்ட் சிங்கிள் பாடல் 'வாங்க மச்சான் வாங்க' என்று தொடங்குகிறது. இந்த பாடலை பாடியவர் குறித்த தகவல் நாளை காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, மகத், பிரபு, ரம்யாகிருஷ்ணன், நாசர், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :