செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2024 (17:38 IST)

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முக்கிய நபர் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி தகவல்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பணிபுரியும் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிவடைந்து எட்டாவது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த சீசனில் சில வைல்டு கார்டு  போட்டியாளர்களுடன் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தவிர நூற்றுக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர் என்பதும் இயக்குனர் டீம், உதவி இயக்குனர்கள் டீம், அசோசியேட் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றி வந்த ஸ்ரீதர் என்பவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது மரண செய்தி  பிக் பாஸ் குழுவினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீதர் மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Edited by Mahendran