செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 7 நவம்பர் 2020 (21:58 IST)

’’ஈஸ்வரன்’’ படக்குழுவுக்கு தங்கத்தைப் பரிசளித்த ’’தங்க மகன்’’ சிம்பு !

simbu

நடிகர் சிம்பு தற்போது ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்துள்ளார். சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை வெறும் 40 நாட்களில் முடித்துள்ளனர் படக்குழுவினர். இப்படத்தை மாதவ் மீடியா தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் அனைவருக்கும் பெரும் ஆச்சர்யம் ஏற்படுத்தினாலும்  சினிமா ஆரோக்கியமான வழியில் செல்வதாகப் பலரும் படக்குழுவைப் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள இடங்களில் ஈஸ்வரன் பட ஷூட்டிங் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் பணியாற்றிய சுமார் 400 பேருக்கு சிம்பு ஒரு கிராம் தங்கம் மற்றும் வேஷ்டி, சீலை வழங்கி தீபாவளி பரிசளித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் நடித்துள்ள 200 பேருக்கு சேலை,வேஷ்டிகள், இனிப்புகள் வழங்கி தனது அன்பை தெரித்துள்ளார்.

ஒஸ்தி படத்துகு இசையமைத்த தமன் இசையில், திரு –ஒளிபதிவில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஆண்டனி எடிட்டிங் செய்கிறார்.  இப்படத்தின் டீசர் தீபாவளிக்கு ரீலீஸாவது குறிப்பிடத்தக்கது.