ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 நவம்பர் 2020 (18:00 IST)

தீபாவளி அன்று ஈஸ்வரன் டீசர்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சிம்பு!

சிம்புவின் ஈஸவரன் படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.

பொதுவாக சிம்பு படங்கள் ஆரம்பித்தால் முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு மேலாவது ஆகும். ஆனால்  இம்முறை அவர் நடிக்கும் ஈஸ்வரன் திரைப்படம் மின்னல் வேகத்தில் முடிந்து வருகிறது. எல்லா காட்சிகளையும் ஒரே டேக்கில் ஓகே செய்துள்ள சிம்பு ‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பில்  தான் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டாராம் .


சிம்புவின் படப்பிடிப்பை 15 நாட்களுக்கு மேல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது பத்தே நாட்களில் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் ஆச்சரியமடைந்தனர். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் ஈஸ்வரன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஈஸ்வரன் படத்தின் டீசரை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.