வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 27 நவம்பர் 2021 (14:58 IST)

’மாநாடு’ படத்தின் இரண்டு நாள் வசூல்: தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வெளியிட்டு வரும் நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
 
சிம்புவின் ’மாநாடு’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் நேற்று முன்தினமும் நேற்றும் மிகப்பெரிய வசூலை பெற்றதாக வட்டாரங்கள் கூறின. இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் இந்த இரண்டு நாட்களில் ’மாநாடு’ படம் ரூபாய் 14 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
 
ஏற்கனவே முதல் நாளில் இந்த பழம் 8 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் 6 கோடி வசூல் செய்து உள்ளது என்பது இதன் மூலம் தெரியவருகிறது ’மாநாடு’ படத்தின் மிகப்பெரிய வசூல் படக்குழுவினர்களுக்கு புதுத்தெம்பை அளித்துள்ளது என்பதும் இந்த படம் மிகப்பெரிய லாபத்தை அனைவருக்கும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது