புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 27 நவம்பர் 2021 (09:31 IST)

மாநாடு படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் மாநாடு படத்தின் வெற்றியை அடுத்து படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். இதை மகிழ்ச்சியோடு படக்குழுவினர் ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டுள்ளனர்.