நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை அடுத்து தனுஷின் இயக்கத்தில் மூன்றாவது படமாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமாக இது இருக்கும் என தெரிகிறது.
இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பவிஷுடன், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடிக்கின்றனர். படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸாகிறது. இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸானது. படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் தற்போது படத்துக்கு முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சிம்பு ரசிகர்கள் சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் “STR” என்று வருமாறு டிக்கெட்டை புக் செய்து அதன் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.