புதன், 10 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 13 பிப்ரவரி 2025 (07:54 IST)

ஒரே மேடையில் சிம்பு, தனுஷ் & சிவகார்த்திகேயன்… அதர்வா படத்துக்காக ஒன்றிணையும் பிரபலங்கள்!

ஒரே மேடையில் சிம்பு, தனுஷ் & சிவகார்த்திகேயன்… அதர்வா படத்துக்காக ஒன்றிணையும் பிரபலங்கள்!
இன்று தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கும் தயாரிப்பாளர் என்றால் அது ஆகாஷ் பாஸ்கரன்தான். அவரின் Dawn பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷை வைத்து ‘இட்லி கடை, சிம்புவை வைத்து ‘சிம்பு 49’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது.

இதற்கிடையில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குனராக அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் அறிவிப்பு இன்று நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் சிம்பு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய மூவரும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.