திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 7 ஏப்ரல் 2018 (14:42 IST)

சிம்புவும் சிவகார்த்திகேயனும் இணைந்த ஒரே படம்

சிம்புவும் சிவகார்த்திகேயனும் இதுவரை ஒரு படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை என்பது தெரிந்ததே. ஆனால் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றியுள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

ஆம், சிம்பு நடித்த 'வேட்டை மன்னன்' என்ற படத்தை நெல்சன் இயக்கி வந்தார் என்பதும் இந்த படம் எதிர்பாராத காரணத்தால் கைவிடப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் உதவி இயக்குனராக பணிபுரிந்தாராம். விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள் என்பதால் இயக்குனர் நெல்சனும் சிவகார்த்திகேயனும் ஏற்கனவே நண்பர்கள். எனவே நெல்சன் இயக்கிய 'வேட்டை மன்னன்' படத்தில் சிவகார்த்திகேயன் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். சிம்பு பேசும் வசனங்களை எடுத்து கொடுப்பவர் இவர்தானாம்

இந்த படம் வெளியாகாவிட்டாலும் தனக்கு சிம்பு என்ற நண்பர் கிடைத்தது இந்த படத்தால் தான் என்றும், தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீசின்போது சிம்புவிடம் இருந்து தனக்கு வாழ்த்து கிடைத்துவிடும் என்றும் சிவகார்த்திகேயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் தற்போது நயன்தாரா, ஜாக்குலின், அறந்தாங்கி நிஷா உள்பட பலர் நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.