செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (12:17 IST)

சதீஷைக் கழட்டி விட்டாரா சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் கருணாகரன் நடிப்பதால், சதீஷைக் கழட்டி விட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கிவரும் ‘சீம ராஜா’ படத்தில் நடிக்கிறார். சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், காமெடியனாக சூரி நடிக்கிறார். நெப்போலியன், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். இந்தப் படத்தில் காமெடியனாக கருணாகரன் ஒப்பந்தமாகியுள்ளார்.
பொதுவாக, சூரி மற்றும் சதீஷ் என இரண்டு காமெடியன்களுடன் மட்டுமே இதுவரை சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். கிராமத்துக் கதை என்றால் சூரியும், நகரத்துக் கதை என்றால் சதீஷும் என்பதுதான் சிவகார்த்திகேயன் கணக்கு. ஆனால், இந்தப் படத்தில் கருணாகரன் ஒப்பந்தமாகியுள்ளதால், சதீஷை சிவகார்த்திகேயன் கழட்டி விட்டாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.