நடிகர் கருணாஸ் நடித்த படத்திற்கு விருது
வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான படம் ஆதார்.
இப்படத்தில் கருணாஸ், அருண்பாண்டியன், இனியா ரித்விகா உள்ளிட்ட நடிகர்கள் நடித்டிஹ்ருந்தனர்.
இப்படம் எளிய மக்களின் வாழ்க்கையைப் பற்றியதாக சித்தரித்த நிலையில், ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், சென்னையில் நடந்த 20 வது சர்வதேச படவிழாவில் தமிழ் படங்கள் பிரிவில் திரையிடப்பட்ட 12 படங்களில் ஆதார் படமும் திரையிடப்பட்டது.
இப்படத்திற்கு சிறந்த தயாரிப்பிற்காக விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, இப்படத்தை தயாரித்த பி.சசிகுமாருக்கு விருது வழங்கப்பட்டது.