1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2021 (11:43 IST)

கவர்ச்சி களஞ்சியத்தை கலைத்த ஷிவானி: பிக்பாஸ் தந்த மாற்றமா?

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை நீக்கினார் ஷிவானி. 

 
கொரோனா டாக்டவுனின் போது வீட்டில் இருந்த ஷிவானி தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு வந்தார். அதன் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் அங்கும் பிரபலமாகி பைனல் வீக் முன்பு வரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். 
 
இந்நிலையில், தற்போது பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை நீக்கி உள்ளார். பிக்பாஸ் சென்று வந்த பின்னர் ஷிவானின் இந்த மாற்றம் ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.