உங்க 5 பேரு மூஞ்சிய பார்க்கவே எனக்கு பிடிக்கல... கடுப்பான கமல்!

Papiksha Joseph| Last Updated: சனி, 16 ஜனவரி 2021 (18:37 IST)

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைகிறது. இத சீசனில் ஆரி வெற்றியாளர் என மக்கள் எப்போதோ முத்திரை குத்திவிட்டனர். இது வீட்டிலிருக்கும் சக போட்டியாளர்களுக்கும் தெரிந்துவிட்டது. அதனால் தான் நேற்று கூட 5 லட்சம் பண பெட்டியுடன் கேபி வெளியேறிவிட்டார்.
மேலும் ரியோவும் அந்த பணத்தை கேட்டு கேபியை எமோஷனலாக பிளாக் மெயில் செய்தார். இருந்தும் கேபி தன் முடிவில் உறுதியாக இருந்து பணத்துடன் வெளியேறினார். இந்நிலையில் வார இறுதி நாளான இன்று கமல் ஹாசன் வந்து முதல் ப்ரோமோவில் " Bigg Boss grand finale... 1 day to go " என பேசி நிகழ்ச்சி மீதான சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளார்.

அதையடுத்து இரண்டாவது ப்ரோமோவில் கமல் ஹாசன் , ஒருவர் பணத்துடன் வெளியேறிவிட்டார். மீதமிருக்கும் 5 பேரில் டைட்டில் வெல்லப்போவது யார்? என்று தீர்மானிக்கும் உங்கள் ஓட்டுகள் வந்து சேர்ந்துவிட்டது. என கூறி கொஞ்சம் பதற்றத்தையும் , நிறைய எதிர்ப்பார்பையும் ஏற்படுத்தியுள்ளார்.
சற்றுமுன் வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் 5 பேரும் டிப் டாப்பாக ட்ரஸ் பண்ணிக்கொண்டு ஃ பைனல் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். அவர்களிடம் பழைய நண்பர்களின் வருகை உங்களுக்கு எந்த மாதிரி உணர்வை கொடுத்தது என கேட்டு உங்கள் 5 பேரின் முகங்களை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை என கூறி அவர்களை கொஞ்சம் சிரிக்க வைத்தார்.


இதில் மேலும் படிக்கவும் :