வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (11:48 IST)

புதிய ஓடிடி தளத்தை தொடங்கும் ஷாரூக்கான்! – ட்விட்டரில் அறிவிப்பு!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் புதிய ஓடிடி தளத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி மற்றும் இணைய பயன்பாடு காரணமாக இந்தியாவில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு காரணமாக பல படங்கள் ஓடிடியில் வெளியாகி வந்த நிலையில் ஓடிடி தளங்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

இதனால் புதிய புதிய ஓடிடி தளங்கள் உருவாகி வரும் நிலையில் பிரபல இந்தி நடிகர் ஷாரூக்கான் புதிய ஓடிடி தளம் ஒன்றை தொடங்க உள்ளார். எஸ்.ஆர்.கே ப்ளஸ் என்ற அந்த ஓடிடி தளத்தின் லோகோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஷாரூக்கான் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.