1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (10:24 IST)

ஷாருக்கானுடன் அட்லி மோதலா? சமூகவலைதளத்தில் பகிர்ந்த டிவீட்டால் பரபரப்பு!

அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தினை ட்ராப் செய்துவிட்டதாக சில தகவல்கள் பரவி வருகின்றன.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இந்நிலையில் இந்த படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் இணையத்தில் பரவின.

மேலும் இது சம்மந்தமாக ஷாருக்கானுக்கும் அட்லிக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அட்லி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில்  ’ஒருநாள் உங்களைத் தவறாக நடத்தியவர்கள் வருத்தப்படும் நாள் வரும். என்னை நம்புங்கள் கண்டிப்பாக அந்த நாள் வரும்’ என்று பகிர்ந்திருந்த புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.