வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (10:51 IST)

புதிய ஓடிடி நிறுவனத்தைத் தொடங்கும் ஷாருக்கான்! பாலிவுட் பிரபலங்கள் பாராட்டு!

நடிகர் ஷாருக்கான் தனது பெயரில் புதிய ஓடிடி நிறுவனத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுக் காலம் தற்போது ஓடிடி தளங்களுக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கையை பல மடங்கு அதிகமாக்கியுள்ளது. இதில் நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் கொண்ட தளங்கள் முன்னணியில் இருக்க, ஆஹா போன்ற பிராந்திய ஓடிடி சேனல்களும் தங்கள் வாடிக்கையாளர்களைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் SRK+ என்ற பெயரில் புதிய ஓடிடி நிறுவனத்தைத் தொடங்கவுள்ளதாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதையடுத்து பல பாலிவுட் கலைஞர்களும் அவருகுப் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.