1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (10:59 IST)

அடிக்கடி சுரைக்காயை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள் !!

கோடை கால வெப்பத்தால் உடல் சூடு அதிகரித்து, தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் சூடு குறையும், வெப்பத்தால் ஏற்படும நோய்கள் தாக்காமல் காக்கும்.


சுரைக்காய் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது. ஏனெனில் சுரைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியேற உதவுகிறது.

அடிக்கடி சுரைக்காயை உணவில் சேர்த்து கொண்டால் கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும்.

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தினால் சிறுநீரம் சம்பந்தமான பிரச்சனைகளில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும்.

பித்தத்தைக் குறைக்க சுரைக்காயை உணவில் சேர்த்து கொள்ளலாம். ஏனெனில் சுரைக்காய் பித்தத்தைக் குறைக்க ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாகும்.

அதீத இரத்த அழுத்தம் ஏற்பட்டு அதை குறைக்க நினைப்பவர்கள் ஒரு துண்டு சுரைக்காய் மற்றும் விதை நீக்கிய ஒரு நெல்லிக்காயை சேர்த்து நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அதீத இரத்த அழுத்தம் விரைவில் குறைந்து கட்டுப்பாட்டிற்குள் வரும்.