துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே?
‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே, அடுத்து துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கலாம் என்கிறார்கள்.
தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம், தென்னிந்தியா முழுவதும் பயங்கர ஃபேமஸாகிவிட்டது. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாகவும், ஷாலினி பாண்டே ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்குப் பிறகு இருவருக்கும் ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றன.
துல்கர் சல்மான், தமிழ் – மலையாளத்தில் நடிக்கும் ஒரு படத்துக்கு ஷாலினி பாண்டேவை ஹீரோயினாக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அறிமுக இயக்குநரான ரா.கார்த்திக் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். ஷாலினியிடம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்றிருப்பதாகவும், இன்னும் கன்ஃபார்ம் செய்யப்படவில்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.