ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2017 (16:38 IST)

“எனக்குத் தெரியாமல் க்ளைமாக்ஸ் மாற்றப்பட்டுள்ளது” – பிஜோய் நம்பியார்

‘எனக்குத் தெரியாமல் க்ளைமாக்ஸ் மாற்றப்பட்டுள்ளது’ என இயக்குநர் பிஜோய் நம்பியார் தெரிவித்துள்ளார்.


 

 
பிஜோய் நம்பியார் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘சோலோ’. துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாய் தன்ஷிகா, ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ், நேகா சர்மா என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். நீர், காற்று, நெருப்பு மற்றும் நிலம் என 4 கதைகளில், 4 வேடங்களில் நடித்துள்ளார் துல்கர்.

இந்தப்  படத்தின் கடைசி பார்ட்டில் உள்ள க்ளைமாக்ஸ் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் இருந்து குரல்கள் எழுந்துள்ளன. பொதுவாக, இப்படி குரல்கள் எழுந்தால் க்ளைமாக்ஸை மாற்றுவது வழக்கம். ஆனால், தான் அப்படி மாற்ற மாட்டேன் எனப் பிடிவாதமாக பிஜோய் நம்பியார் நிற்க, அவருக்குத் தெரியாமலேயே க்ளைமாக்ஸை மாற்றியிருக்கின்றனர்.

“என் அறிவுக்குத் தெரிந்து இது நிகழவில்லை. என் ஒப்புதலுடனும் இது நடக்கவில்லை. நல்லதோ, கெட்டதோ… நான் எடுத்த படத்தின் பக்கம் நிற்கிறேன். ஒட்டுமொத்தமாக படத்துக்கு பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது” என்கிறார் பிஜோய் நம்பியார்.