காதலர்களாக 25 ஆண்டுகள் நிறைவு… கேக் வெட்டி கொண்டாடி அஜித் & ஷாலினி!
அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
தமிழ் சினிமாவின் ஆதர்ஸ தம்பதிகளாக இருந்து வரும் அவர்கள் ரசிகர்களுக்கு பிடித்த தம்பதிகளாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த ஷாலினி குடும்பப் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். அதில் அவர் பகிரும் புகைப்படங்கள் அஜித் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்போது அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றனர். இருவரும் காதலிக்க தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்தததை அடுத்து நண்பர்களுடன் இணைந்து இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.