ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 18 மார்ச் 2024 (07:12 IST)

எப்போது அழைத்தாலும் ஷூட்டிங் செல்ல தயார்… விடாமுயற்சி அப்டேட் கொடுத்த அஜித் தரப்பு!

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.  இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது ஓய்வில் இருக்கிறார். அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் அவரால் இன்னும் சில மாதங்களுக்கு ஷூட்டிங் செல்ல முடியாது என ஒரு வதந்தி பரவி வந்தது. இது பற்றி அஜித் தரப்பு தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில் “லைகா நிறுவனம் எப்போது அழைத்தாலும் ஷூட்டிங் செல்ல அஜித் தயாராக இருக்கிறார்” எனக் கூறியுள்ளது.

லைகா நிறுவனம் தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அதனால் முதலில் வேட்டையன் திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, அதன் பின்னர்  விடாமுயற்சி படத்தை தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.