ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2024 (22:33 IST)

22 ஆண்டுகளுக்கு பின் அஜித் எடுத்த முடிவு!

ajithkumar
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், விடாமுயற்சி படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில்,    அஜித்தின் 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என  ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், இருவரும் இணையும் அடுத்த  பட அப்டேட் வெளியானது.
 
அதன்படி, இப்படத்தின் தலைப்பு -''குட்  பேட் அக்லி ''என்று யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று வெளியானது.
 
இப்படம் வரும் ஜூனில் ஷூட்டிங் தொடங்கப்பட்டு, 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், அஜித் சில ஆண்டுகளுக்கு முன்பு, தன் படங்களுக்கு ரெட், சிட்டிசன் என்று ஆங்கிலத்தில் தலைப்பு வைத்த நிலையில், அதன்பிறகு அவர் தலைப்பில் கவனம் செலுத்த தொடங்கியதாகவும் அதனால், தமிழிலேயே தலைப்பு வைக்க அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
 
ஆனால், அஜித்தின் 63வது படத்தின் தலைப்பு ஆங்கிலம் மற்றும் மலையாள படத்தின் டைட்டிலையே வைக்க காரணம் அவர் தலைப்பு  விஸசயத்தில் தலையிடவில்லை என கூறப்படுகிறது.
 
இதில், அவர்  3 கேரக்டரிலும் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.