நான் செய்வதை சரியென்று உணர்த்தியதற்கு நன்றி- ஷாருக் கான் உருக்கம்!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.
இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டன்கி திரைப்படமும் வெளியாகி 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.
இந்நிலையில் ரசிகர்களுடனான சந்திப்பு ஒன்றில் பேசிய ஷாருக் கான் “எனது முந்தைய படங்கள் சரியாக போகாததால் நான் தவறான படங்களை எடுத்துவிட்டேனோ என நினைத்தேன். ஆனால் என்னுடைய டன்கி, ஜவான் உள்ளிட்ட படங்களை மக்கள் அதிகமாக நேசித்தார்கள் என நம்புகிறேன். பல ரசிகர்கள் நான்கு ஆண்டுகள் இடைவெளி எல்லாம் வேண்டும். நான்கு மாதங்கள் வேண்டுமானால் பரவாயில்லை எனக் கூறி என்னை நெகிழ வைத்து விட்டார்கள். நான் செய்வது சரி என்று உணர்த்தியதாக அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.