புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (12:05 IST)

பாம்பு கூட இப்புடி ஆடி இருக்குமான்னு தெரியல... மாடர்ன் நாகக் கன்னிகளின் நடனம் - வீடியோ!

இந்தியில் ஒளிபரப்பாகி இந்தியா முழுக்க படு பேமஸ் ஆன சீரியல் "நாகின்" மௌனி ராய் நடித்திருந்த இந்த சீரியல் அக்கட தேசத்து குடும்பங்களில் வயது வித்தியாசமின்றி அனைவரையும் டிவி முன்பு அமர வைத்தது. எதிர்பார்க்காத அளவுக்கு ஹிட் அடித்த இந்த சீரியல் தமிழில் டப்பிங் செய்து நாகினி என சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி மெகா ஹிட் அடித்தனர். 
 
இதை ஏன் இப்போது சொல்கிறோம் என்றால்... சமீபத்தில் சன் டிவி-யின் ஒளிபரப்பப்பட்ட  ‘சவாலே சமாளி’ நிகழ்ச்சியில் சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்கினார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விக்னேஷ் காந்த் பார்வையாளர்களை ஈர்க்கும் படி ஒரு டாஸ்க் கொடுத்தார். அதாவது, அதில் பங்கேற்ற சீரியல் நடிகைகள் பாம்பு நடனமாட சொல்லி அவர் மகுடியில் வாசித்தார்.  
 
பின்னர் ஒவ்வொருத்தராக வித்யாசமான பல பாம்பு நடனங்களை அரங்கேற்றினர். வெஸ்டர்ன் ஸ்டைலில் ஆடிய அந்த பாம்பு நடனம் அரங்கத்தை அமர்களப்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது. இதோ அந்த நடனத்தை நீங்களே பாருங்கள் ...