திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 ஆகஸ்ட் 2018 (09:09 IST)

அட்ரா அட்ரா அட்ரா...ஐஸ்வர்யாவின் கன்னத்தில் அடித்த செண்ட்ராயன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மோசமான போட்டியாளர் என்று மக்களால் அதிகளவில் வெறுக்கப்படும் ஐஸ்வர்யா நேற்று போட்ட ஓவர் ஆட்டத்தால் நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர். தனது சொந்த பகையை மனதில் வைத்து கொண்டு, யாஷிகாவுடன் கூட்டணி சேர்ந்து அவர் செய்யும் அராஜகம் அருவருப்பை தருகிறது.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் ஐஸ்வர்யாவும் செண்ட்ராயனும் கடுமையாக வார்த்தைகளால் மோதிக்கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் செண்ட்ராயனை ஐஸ்வர்யா நாய் என்று திட்ட செண்ட்ராயன் பளாரென கன்னத்தில் அறைவது போன்று முடிகிறது இந்த புரமோ.
 
பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் ஐஸ்வர்யாவின் அடாவடித்தனத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நிலையில் செண்ட்ராயன் மட்டுமாவது பொங்கி எழுந்தது பார்வையாளர்களுக்கு ஒரு ஆறுதலாக உள்ளது. டாஸ்க்குக்கு ஐஸ்வர்யா ராணி, அவர் என்னவோ உண்மையான ராணி போன்று நடந்து கொள்வதால் அருவருப்பின் உச்சகட்டத்தை நோக்கி பிக்பாஸ் சென்று கொண்டிருக்கின்றது.
 
வழக்கம் போல் இந்த  வாரமும் கமல் வந்து ஐஸ்வர்யாவுக்குத்தான் சப்போர்ட் செய்வார். அவருக்கு சுயபுராணம், தற்புகழ்ச்சி, விஸ்வரூபம் 2 படத்தின் புரமோஷன் தான் முக்கியமே தவிர வேறு இல்லை.