திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 31 ஜூலை 2018 (23:03 IST)

பாலாஜிக்கு இந்த அசிங்கம் தேவையா? அராஜகத்தின் உச்சகட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ராணி, பொதுமக்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ராணியாக ஐஸ்வர்யாவும், அவருக்கு பாதுகாப்பாளராக டேனியலும் ஆலோசகராக ஜனனியும் இருப்பார்களாம். மற்ற அனைவரும் பொதுமக்கள்
 
இந்த டாஸ்க்கில் ராணி சர்வாதிகாரம் படைத்தவர் என்பதால் இந்த டாஸ்க்கில் தான் கலந்து கொள்ள முடியாது என்று பாலாஜி கூறிவிட்டார். அதனால் ராணி, அந்த வீட்டின் குப்பைகளை பாலாஜி மீது போட சொல்கிறார். யாரும் போட தயங்குவதால் ராணி ஐஸ்வர்யாவே குப்பையை பாலாஜி மீது போடுகிறார்.
 
கடந்த வார டாஸ்க்கில் தகுதியே இல்லாத ஷாரிக்கை நடுவராக தேர்வு செய்தது போல், எப்போது சமயம் கிடைக்கும் பாலாஜி, உள்பட ஒருசில பழிவாங்கலாம் என்று காத்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவுக்கு வேண்டுமென்றே சர்வாதிகார பட்டமும், கொடுத்து இந்த டாஸ்க்கை நல்லபடியாக செய்தால் அடுத்த வாரமும் அவரை நாமினேஷன் செய்ய முடியாது என்ற சலுகையையும் கொடுக்கின்றார் பிக்பாஸ்.
 
இந்த டாஸ்க்கை பயன்படுத்தி ஐஸ்வர்யா, தனக்கு பிடிக்காதவர்களை பழிவாங்கும் போக்கும் விபரீதத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. மொத்ததில் மடத்தனமான ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதாகவே நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். மேலும் காமெடியனாக இருந்தாலும் மதிப்பும் மரியாதையுடன் இருந்த பாலாஜிக்கு இந்த அசிங்கம் தேவையா? என்ற கேள்வியே எழுகிறது.