திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (10:25 IST)

ஒரே வார்த்தையின் … தன் படத்தின் இயக்குனரைப் பாராட்டிய செல்வராகவன்!

இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் சாணிக்காயிதம் திரைப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரனை டிவிட்டரில் பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் தான் ஒரு படத்தில் நடிக்கபோவதாக அறிவித்த போதே அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. செல்வராகவன் போன்ற தேர்ந்த இயக்குனரை தன் கதையின் மூலம் நடிக்க சம்மதிக்க வைத்த அந்த இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. அந்த இயக்குனர் இதற்கு முன்னர் ராக்கி என்ற படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு சாணிக்காயிதம் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் குற்றவாளிகள் போல உட்கார வைக்கப்பட்டு இருந்தனர். இந்த போஸ்டர் ரசிகர்களை மட்டும் இல்லாமல் சினிமா உலக பிரபலங்கள் பலருக்கும் பிடித்திருந்தது. அதனால் சமுகவலைதளங்களில் பரவலான பாராட்டுகளைப் பெற்றன.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் படத்தின் திரைக்கதையை படித்த செல்வராகவன் இயக்குனரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அதில் ‘படத்தின் ஸ்கிரிப் ரீடிங் முடிந்தது. ஒரே வார்த்தைதான் எக்ஸ்ட்ரா ஆர்டினரி’ எனப் புகழ்ந்துள்ளார்.