தன் ஆறு மாத குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் செல்வராகவன்!
இன்றைய இளம் இயக்குனர்களில் முக்கியமான திரைப்படங்களை மிக் இளம்வயதிலேயே இயக்கி முன்னணி இயக்குனர்களாலேயே பாரட்டப்படுபவர் செல்வராகவன். அது மட்டுமில்லாமல் தன்னுடைய தம்பியை ஒரு முன்னணி ஹீரோவாகவும் உருவாக்கியுள்ளார். இவருக்கு நடிகை சோனியா அகர்வாலுடன் திருமணம் நடந்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
அதையடுத்து தன்னுடைய உதவியாளராக கீதாஞ்சலியை செல்வராகவன் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு லீலாவதி , ஓம்கர் , ரிஷிகேஷ் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குழந்தையை கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.