1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 10 ஜூன் 2021 (17:17 IST)

என்ன சொல்ல போகிறாய்...? கேப்ஷன் கொடுத்து கேட்கும் ரம்யா!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது.
 
ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார்.
சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில் தற்போது பட்டுப்புடவை அணிந்து ட்ரடிஷனல் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு  என்ன சொல்ல போகிறாய்...? என கேப்ஷன் கொடுத்து கமெண்ட்ஸ் வாரி குவித்து வருகிறார்.