வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 25 மே 2024 (10:32 IST)

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

தமிழ் சினிமாவில் அறிமுகமே ரகுல் ப்ரீத் சிங்குக்கு பெரிய நடிகர்களோடு அமைந்தது. அடுத்தடுத்து மகேஷ் பாபு, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து ஸ்பெஷல் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அவரின் அறிமுகம் கன்னட சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது.

தமிழில் இப்போது இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனோடு அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே ரிலீஸாகாமல் இழுத்துக்கொண்டே செல்வதால் இப்போதைக்கு அவரின் தமிழ்ப் படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லை. சமீபத்தில் காதலரை கரம்பிடித்தார் ரகுல்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான தன்னுடைய போட்டோக்களை அடிக்கடி பதிவிட்டு வைரல் ஆகி வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் சிவப்பு நிற மாடர்ன் உடையணிந்துள்ள பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.