பப்ளிசிட்டி பைத்தியம்... விமர்சித்தவரை வெளுத்து வாங்கிய தர்ஷா குப்தா!

Papiksha Joseph| Last Modified வியாழன், 10 ஜூன் 2021 (17:04 IST)

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
குறிப்பாக குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோர் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், புகழ் அருண்விஜய் மற்றும் சந்தானம் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அந்தவகையில் விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தர்ஷா குப்தா. அவர் குக் வித் கோமாளி 2ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் அவர் பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.
தொடர்ந்து இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் தர்ஷா குப்தா எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். கூடவே நிறைய உதவி செய்யும் நலன் உள்ளமும் கொண்டவர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பசியுற்றோருக்கு தேடி சென்று வீதி வீதியாக உணவளித்து உதவி வருகிறார். இதனை புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.

இதனை விமர்சித்த நெட்டிசன் ஒருவர், " நல்ல விஷயம் தான். ஆனால், அத ஏன் போட்டோ எடுத்து போட்றீங்க? என்று கேட்டிருந்தார். அவருக்கு பதில் அளித்த தர்ஷா, " என் ரசிகர்களை ஊக்குவிக்கத் தான். என்னை பார்த்து பலர் செய்கிறார்கள். நல்ல விஷயத்தை எல்லா இடத்திலும் பரப்புவோம். அதனால் எல்லோரும் பயனடைவார்கள் என்று கூறி அவரை ஆஃப் செய்தார்.


இதில் மேலும் படிக்கவும் :