செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (13:03 IST)

நமக்காகத்தான் அரசாங்கமே! அரசாங்கத்துக்காக நம்ம இல்ல..: விஜய்சேதுபதி

வரும் 20ம் தேதி வெளியாக உள்ள சீதக்காதி படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 


 
இதில் நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் இருக்கும் விஜய் சேதுபதியும், வக்கீலும் வாதிடும் வகையில் காட்சிகள் இருக்கின்றன.அதில் விஜய் சேதுபதியை பார்த்து அரசாங்க ஊழியரான நீங்கள்,அரசாங்கத்துக்கு பிடிக்காதவர்களுக்கு உதவக்கூடாது என பேசுகிறார்.அதற்கு பதில் அளிக்கும் விஜய் சேதுபதி, அவர்கள் யாரும் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவருக்கு நான் உதவி செய்ததில் தவறில்லை. உங்களுக்காக, எனக்காக, மக்களுக்காகத்தான் அரசாங்கமேயொலிய, அரசாங்கத்துக்காக நம்ம இல்ல...என்று பேசுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.