செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 8 டிசம்பர் 2018 (14:36 IST)

மல மலவென தயாராகும் விஜய் சேதுபதியின் சிலை!

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் ‘அய்யா’ கேரக்டருக்கு 4 மாவட்டங்களில் மெழுகு சிலை திறக்கப்படவுள்ளது .


 
பாலாஜி தரணிதரனின் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம். வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பை வரவழைத்த இந்த படத்தில் '...ப்பா' மற்றும் 'மெடுல்லாஆப்லகேட்டா' என விஜய் சேதுபதி சொல்லும் பல டயலாக்குகளும் இன்றளவும் பிரபலமாக உள்ளது.
 
இப்படத்தைத் தொடர்ந்து வரும் 20ம் தேதி சீதக்காதி படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் 80 வயது நிரம்பிய முதியவர் வேடத்தில் நடித்துள்ளார். அதன் கதாபாத்திரம் தான் அய்யா ஆதிமூலம். 
 
சமீபத்தில்  படத்தின் புரோமோஷனுக்காக முதல் விளம்பரமாக சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் சீதக்காதி படத்தில் விஜய்சேதுபதி ஏற்றுள்ள அய்யா கதாபாத்திரன் மெழுகுச்சிலை திறக்கப்பட்டது 
 
அதனை தொடர்ந்து தற்போது மேலும், 4 மாவட்டங்களில் அய்யா சிலையை திறந்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த மாவட்டங்கள் என்ற தகவல் இன்னும் வரவில்லை.