வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (14:50 IST)

மாநாடு ஸ்பாட்டில் சீமான் - சிம்பு மீட்டிங்!! பின்னணி என்ன??

மாநாடு பட சூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திக்கொண்டுள்ளனர். 
 
நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் 'மாநாடு' திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் வழக்கம்போல் படக்குழுவினர்களுக்கு ஒத்துழைப்பு தர சிம்பு அடம்பிடித்ததால் இந்த படம் கிட்டத்தட்ட டிராப் ஆனதாக செய்திகள் வெளிவந்தது.
இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தனர். இதையடுத்து சிம்புவின் தாயார் கொடுத்த உறுதி மொழியை ஏற்று 'மாநாடு' படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்தார். பின்னர் படப்பிடிப்பிற்கான வேலைகள் மும்முரமாக துவங்கிய நிலையில் இன்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. 
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திகு வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிம்புவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைப்பெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் சந்திப்பு புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.