வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 அக்டோபர் 2020 (15:33 IST)

பா ரஞ்சித் படத்தின் பெயர் மாற்றம்! பரபரப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

இயக்குனர் பா ரஞ்சித் ஆர்யா உள்ளிட்ட பல நடிகர்களை வைத்து இயக்கி வரும் திரைப்படத்தின் பெயரில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான காலா திரைப்படத்துக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் சல்பேட்டா என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இதில் ஆர்யா பாக்ஸராக நடிக்க உள்ளார். இதற்காக அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இப்போது படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இப்போது சென்னையை அடுத்த ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இத்தனை நாட்களாக சல்பேட்டா பரம்பரை என அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தின் பெயர் உண்மையில் சார்பேட்டா பரம்பரையாம்.
source வலைப்பேச்சு