செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (13:53 IST)

சர்காரு வாரிபாட்டா முதள் நாள் வசூல் இவ்வளவா? வெளியான தகவல்!

மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சர்காரு வாரிபாட்டா திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது.

மகேஷ்பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சர்காரு வாரிபட்டா என்ற படம் இப்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியது. இந்த படத்தின் டீசர் இணையத்தில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

படத்தின் ரிலிஸ் ஜனவரி மாதம் 23 ஆம் தேதி என முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்தன. ஆனால் ஜனவரி மாதம் தெலுங்கில் பல பிரம்மாண்டமான பட்ஜெட் படங்கள் ரிலீஸாக உள்ளதால் சர்காரு வாரிபட்டா படத்தின் ரிலீஸை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு மாற்றியுள்ளதாக படக்குழு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்போது மறுபடியும் ஒரு மாதம் தள்ளிவைக்கப்பட்டு மே 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையடுத்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று அந்த படம் ரிலீஸானது. இந்நிலையில் முதல்நாளில் இதுவரை மகேஷ் பாபு திரைப்படம் வசூலிக்காத அளவுக்கு மிகப்பெரிய தொகையை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் முதல் நாளில் 36.63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.