வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2023 (13:01 IST)

போர் தொழில் படத்தின் வெற்றி… சரத்குமார் நெகிழ்ச்சி!

அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள திரைப்படம் போர்த் தொழில். நேற்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்த படத்தில் சரத்குமாருக்கு அசோக் செல்வனுக்கு இணையான வேடம் கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த கதாபாத்திரத்தை அவர் கையாண்ட விதமும் பாராட்டுகளைக் குவித்துள்ளது. இதையடுத்து படத்துக்குக் கிடைத்துள்ள அபரிமிதமான வெற்றியைப் பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் சரத்குமார்.

அவரது பேச்சில் “போர் தொழில் படத்துக்கு ரசிகர்கள் தரும் ஆதரவை பார்க்கும் போது எனக்கு வார்த்தைகள் வரவில்லை. ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்ப்பது ஊக்கமளிக்கிறது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

தொடர் கொலைகள் செய்யும் ஒரு சீரியல் கில்லரை அனுபவம் மிக்க அதிகாரியான சரத்குமாரும், இளம் போலீஸ் அதிகாரியான அசோக் செல்வனும் இணைந்து கண்டுபிடிக்கும் திரில்லர் கதைதான் போர் தொழில். கதைக்கு தேவையில்லாத காட்சிகள் இல்லாமல் விறுவிறுப்பாக திரைக்கதையை இயக்குனர் உருவாக்கியுள்ளதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சமீபத்தில் ரிலீஸான படங்களில் போர் தொழில் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.