வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 7 மே 2019 (20:50 IST)

எதிர்பார்த்தபடியே வெளியான விஜய்சேதுபதி பட டைட்டில்!

விஜய்சேதுபதி நடித்து வரும் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று அறிவிக்கப்படும் என்று வெளியான என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் சற்றுமுன் விஜய்சேதுபதி நடிப்பில் விஜய்சந்தர் இயக்கும் படத்திற்கு 'சங்கத்தமிழன்' என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தமிழன் தான் இந்த படத்தின் டைட்டில் என ஏற்கனவே தகவல்கள் கசிந்துவிட்டது என்பதும் எதிர்பார்த்த டைட்டிலே வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
விஜய்சேதுபதிக்கு ஜோடியாக இந்த படத்தில் ராஷிகண்ணா நடிக்கவுள்ள நிலையில் நடிகர் ஸ்ரீமான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் விவேக்-மெர்வின் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல். படத்தொகுப்ப்பில் அனல் அரசு ஸ்டண்ட் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பெரும் பொருட்செலவில் விஜயா மூவீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 
ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள 'மாமனிதன்', மற்றும் 'சிந்துபாத்' ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தற்போது சங்கத்தமிழன் படமும் விரைவில் ரிலீசுக்கு தயாராகிவிடும்