1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (08:59 IST)

கோல்டன் கேர்ள் கோமதிக்கு பிரபல நடிகர் ரூ.5 லட்சம் உதவி!

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று ஒரே நாளில் இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும், தான் பிறந்த கிராமத்திற்கும் பெருமை தேடி தந்தவர் கோல்டன் கேர்ள் கோமதி. இவருக்கு ஏராளமான நிதியுதவியும், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது
 
ஏற்கனவே திமுக ரூ.10 லட்சமும், காங்கிரஸ் கட்சி ரூ.5 லட்சமும், ரோபோ சங்கர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கோமதிக்கு நிதியுதவி செய்து அவர் இன்னும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரூ.5 லட்சம் கோமதிக்கு நிதியுதவி செய்துள்ளார்.
 
விஜய்சேதுபதி தற்போது 'லாபம்' படப்பிடிப்பில் இருப்பதால் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை தனது ரசிகர் மன்ற நிர்வாகியிடம் கொடுத்தனுப்பி, தொலைபேசி மூலம் கோமதிக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை விஜய்சேதுபதியின் ரசிகர்கள் சமூக இணையதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்,