வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2019 (19:09 IST)

மே மாதத்திற்கு தள்ளிப்போன விஷாலின் 'அயோக்யா': ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடித்த 'அயோக்யா' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஒருசில காரணங்களால் இந்த படம் ஏப்ரல் இறுதியில் வெளியாகும் என்று கூறப்பட்டது
 
இந்த நிலையில் இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதி இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்கவிருப்பதாக விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. அதன்படி சற்றுமுன்னர் இந்த படம் வரும் மே 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தேர்தல் பரபரப்பு முடிந்த பின்னர் பள்ளி, கல்லூரி விடுமுறை தினத்தில் இந்த படம் வெளிவருவதால் நல்ல ஓப்பனிங் வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
அறிமுக இயக்குனர் வெங்கட்மோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக முதல்முறையாக ராஷிகண்ணா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், சச்சு, வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு. சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார்.